search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மறுவாழ்வு மையங்கள்"

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் 8 வாரங்களில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியும் குடிப்பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாகவும், மதுப்பழக்கத்துக்கு உள்ளானவர்களை திருத்தும் போதை மறுவாழ்வு மையங்கள் தற்போது அரசு மருத்துவ கல்லூரிகளை சார்ந்துள்ள தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன. 

    இதேபோன்ற மையங்களை அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ராம்குமார் ஆதித்யா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.



    இதுபோன்ற மையங்கள் பரவலாக இல்லாததால் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் மதுப்பழக்கத்துக்கு அடிமையான 75 பேர் மாதந்தோறும் உயிரிழந்து வருகின்றனர் என தனது மனுவில் ராம்குமார் ஆதித்யா சுட்டிக்காட்டி இருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் 8 வாரங்களில் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    ×